செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் சுமித் நாகல்!

6th Feb 2021 10:50 AM

ADVERTISEMENT

 


ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ்ஸுடன் மோதுகிறார் இந்தியாவின் சுமித் நாகல்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது. 

இப்போட்டியில் 23 வயது இந்திய வீரர் சுமித் நாகல் பங்கேற்கிறார். முதல் சுற்றில் லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ்ஸை எதிர்கொள்கிறார். தரவரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் சுமித் நாகல், 72-வது இடத்தில் உள்ள பெரான்கிஸ்ஸை வீழ்த்துவது பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் இதற்கு முன்பு, முராரே ரிவர் ஓபன் போட்டியில் விளையாடியபோது பெரான்கிஸ் எளிதாக வென்றார். 

ADVERTISEMENT

யு.எஸ். ஓபன் போட்டியில் முதல் சுற்றை வென்று அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது போல இம்முறையும் சுமித் நாகல் முதல் சுற்று ஆட்டத்தில் வெல்வாரா?

ADVERTISEMENT
ADVERTISEMENT