செய்திகள்

ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் தெவாதியாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் (படங்கள்)

4th Feb 2021 03:38 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் நட்சத்திரமான ராகுல் தெவாதியாவுக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளரும் பஞ்சாப் அணி வீரருமான ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் மற்றும் அந்த ஓவரில் 5 சிக்ஸர்களுடன் 30 ரன்களை எடுத்து கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பினார் தெவாதியா. அந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். தெவாதியாவின் அதிரடியால் வெற்றிக்கனியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

2020 ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் 255 ரன்களும் 10 விக்கெட்டுகளும் எடுத்து முத்திரை பதித்தார். ஹரியாணாவைச் சேர்ந்த 27 வயது தெவாதியா அதிரடி பேட்ஸ்மேனாகவும் லெக் ஸ்பின்னராகவும் உள்ளதால் ஒரு ஆல்ரவுண்டராக அவரால் சாதிக்க முடியும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் ரிதியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் தெவாதியா. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா கலந்துகொண்டுள்ளார். நிச்சயதார்த்தப் புகைப்படங்களை தெவாதியா, ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT