செய்திகள்

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி: தமிழக அணியில் நடராஜன் சேர்ப்பு!

4th Feb 2021 11:19 AM

ADVERTISEMENT

 

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்ற நடராஜன், தேசியக் கொடிக்கு முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டி இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக நடராஜன் மீண்டும் விளையாடுவார்.

தமிழக அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), அபராஜித் (துணை கேப்டன்), இந்திரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக் கான், ஜெகதீசன், சூர்யபிரகாஷ், கெளசிக் காந்தி, ஜே. கெளசிக், எம். அஸ்வின், சாய் கிஷோர், எம். சித்தார்த், சோனு யாதவ், கே. விக்னேஷ், டி. நடராஜன், அஸ்வின் கிறைஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், பெரியசாமி, எம். முகமது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT