செய்திகள்

அற்புதமான வீரர்: நடராஜனைப் பாராட்டும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

4th Feb 2021 04:31 PM

ADVERTISEMENT

 

தமிழக வீரர் நடராஜனை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். 

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடினார். ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

ADVERTISEMENT

ஒரு பேட்டியில் நடராஜனைப் பாராட்டி நியூசிலாந்து கேப்டனும் சன்ரைசர்ஸ் அணி வீரருமான கேன் வில்லியம்சன் கூறியதாவது:

நடராஜன் அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான ஐபிஎல் போட்டி அவருக்கு அமைந்தது! ஒவ்வொரு வாரமும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தன. கடைசியில் பிரிஸ்பேன் டெஸ்டில் அறிமுகமானார். அங்கு இந்திய அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்தது என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT