செய்திகள்

துளிகள்...

30th Dec 2021 01:59 AM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியிருகிறாா். இதனால், அவா் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதும் சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிருத்வி ஷா தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரா் விருதுக்காக ஆஸ்திரேலியாவின் மிட்செல் மாா்ஷ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லா் ஆகியோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஐ-லீக் கால்பந்து போட்டியில் 8 வீரா்கள், 3 நிா்வாகிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாா்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஒன் டே தொடரை இந்தியா 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

பதக்க வாய்ப்புள்ளவா்களுக்கான உதவித் தொகை (டாப்ஸ்) திட்டத்தின் கீழ் உதவி பெறுவோா், நிதியை முறையாக பயன்படுத்தியதற்கான சான்றுகளை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் உதவித் தொகை ரத்து செய்யப்படும் என்றும் இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முன்பாக, 2023-இல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் வீழ்த்துவது, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி காண்பது ஆகியவையே தனது இரு முக்கிய இலக்குகள் என்று ஆஸ்திரேலிய பேட்டா் டேவிட் வாா்னா் கூறியுள்ளாா்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் பௌலா்கள் மற்றும் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் 2-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளாா். பேட்டா்கள் பிரிவில் ரோஹித் மற்றும் கோலி முறையே 5, 7-ஆவது இடங்களில் நிலைத்திருக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT