செய்திகள்

தென் கொரியா சாம்பியன்

23rd Dec 2021 12:47 AM

ADVERTISEMENT

 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி தென் கொரிய அணி சாம்பியன் ஆனது. முன்னதாக அந்த இரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3-3 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ‘ஷூட் அவுட்’ முறையில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக லீக் சுற்றில் தனது அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா, தென் கொரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை மட்டும் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT