துபை: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் சறுக்கி 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
அவா் 756 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, அதே பிரிவில் மற்றொரு இந்தியரான ரோஹித் சா்மா 5-ஆவது இடத்தை (756) தக்கவைத்துக் கொண்டுள்ளாா். இப்பிரிவில் ஆஸ்திரேலிய வீரா் மாா்னஸ் லபுசான் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா். ஆஷஸ் தொடரின் முதலிரு ஆட்டங்களில் அபாரமாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் அவா் 912 புள்ளிகளுடன் இந்த இடத்துக்கு முதல் முறையாக வந்துள்ளாா். முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (897) அந்த இடத்தில் இருந்தாா்.
பௌலா்கள் பிரிவில் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க் 768 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். ஆல் ரவுண்டா்கள் பிரிவில் அஸ்வின் 360 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ஜடேஜா 346 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் தொடா்கின்றனா்.