செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

16th Dec 2021 01:16 PM

ADVERTISEMENT

 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில் இன்று, மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது இந்திய அணி. விமானத்தில் இருக்கும் இந்திய வீரர்களின் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பயிற்சிகள் ஆட்டங்கள் எதுவுமின்றி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT