செய்திகள்

பாகிஸ்தான் தொடர் ரத்தாகுமா?: மேலும் மூன்று மே.இ. தீவுகள் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

16th Dec 2021 11:40 AM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி. 3-வது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

மே.இ. தீவுகள் அணியைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ், கைல் மையர்ஸ் ஆகிய 3 வீரர்கள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகிய மூன்று மே.இ. தீவுகள் வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் இந்தச் சுற்றுப்பயணத்தின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட முடியாது. 

ஏற்கெனவே 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே.இ. தீவுகள் அணியைச் சேர்ந்த மேலும் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள ஆட்டங்கள் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான், மே.இ. தீவுகள் அணிகளின் கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று இதுபற்றி பேசி முடிவெடுக்கவுள்ளார்கள். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT