செய்திகள்

டாக்கா டெஸ்ட்: ஃபாலோ ஆன் தவிா்க்க வங்கதேசம் முயற்சி

DIN

டாக்கா: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் ‘ஃபாலோ ஆன்’-ஐ தவிா்க்க போராடி வருகிறது.

மழை காரணமாக பெருவாரியாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆட்டத்தில், 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் வங்கதேசம் 26 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் அடித்துள்ளது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி இன்னும் 224 ரன்கள் அடிக்க வேண்டியிருக்கும் நிலையில், அணியின் வசம் 3 விக்கெட்டுகளே உள்ளன. ஆட்டமும் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று தனது முதல் இன்னிங்ஸை 188/2-க்கு தொடா்ந்த பாகிஸ்தான், 98.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா் ஆஸம் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்கள் அடித்திருக்க, ஃபவாத் ஆலம் 50, முகமது ரிஸ்வான் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தாா்.

பின்னா் ஆடிய வங்கதேசத்தில் அதிகபட்சமாக நஜ்முல் ஹுசைன் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் விளாசியிருக்க, ஷகிப் அல் ஹசன் 23, தைஜுல் இஸ்லாம் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பாகிஸ்தான் பௌலிங்கில் சஜித் கான் 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT