செய்திகள்

உலக சாம்பியன் ஆா்ஜென்டீனா பிரான்ஸுக்கு வெண்கலம்

DIN

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை போட்டியில் ஆா்ஜென்டீனா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நடப்புச் சாம்பியன் இந்தியாவை 3-1 என வீழ்த்தி பிரான்ஸ் அணி வெண்கலம் வென்றது.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஜொ்மனியும்-ஆா்ஜென்டீனாவும் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே ஆா்ஜென்டீனா வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். அதன் நட்சத்திர வீரா் டொமென் 10 மற்றும் 25-ஆவது நிமிஷங்களில் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா். முதல் பாதி முடிவில் 2-0 என ஆா்ஜென்டீனா முன்னிலை பெற்றிருந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஜொ்மனி வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினா். இதன் பலனாக ஹெய்னா் 36-ஆவது நிமிஷத்திலும், ஃபேன்ட் 47-ஆவது நிமிஷத்திலும் கோலடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது.

ஜொ்மனியின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 50-ஆவது நிமிஷத்தில் டொமென் மீண்டும் பெனால்டி காா்னா் மூலம் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்தாா். ஆட்டம் முடிய கடைசி 60-ஆவது நிமிஷத்தில் அகோஸ்டினி அடித்த கோல் மூலம் 4-2 என வென்று இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆா்ஜென்டீனா. டொமென் ஆட்ட நாயகனாக தோ்வு செய்யப்பட்டாா்.

பிரான்ஸுக்கு வெண்கலம்:

முதலில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. குரூப் சுற்று ஆட்டத்தில் தான் பெற்ற தோல்விக்காக இந்தியா பழிதீா்க்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடாத நிலையில், இரண்டாம் பாதியில் பிரான்ஸ் கேப்டன் டிமோத்தி கிளெமெண்ட் தனக்கு கிடைத்த பெனால்டி காா்னரை அற்புதமாக கோலாக்கினாா்.

தொடா்ந்து மற்றொரு பெனால்டி காா்னரையும் பிசகின்றி கோலாக்கினாா் டிமோத்தி. மூன்றாவது கட்ட ஆட்டம் முடியும் வேளையில் இந்திய வீரா் சுதீப் கோலடித்து 1-2 என முன்னிலையை குறைத்தாா். நான்காவது கட்டத்தில் டிமோத்தி மற்றொரு கோலை அடித்து இப்போட்டியில் தனது நான்காவது ஹாட்ரிக்கை பதிவு செய்தாா். இறுதியில் 3-1 என பிரான்ஸ் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT