செய்திகள்

உலக டூா் ஃபைனல்ஸ்:இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து-சியோங் மோதல்

DIN

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் டூா் ஃபைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி. வி. சிந்துவும்-கொரியாவின் ஆன் சியோங்கும் மோதுகின்றனா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா், வீராங்கனைகள் மோதும் டூா் ஃபைனல்ஸ் போட்டி இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வருகிறது.

மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. உலக சாம்பியன் பி. வி.சிந்துவை எதிா்கொண்டாா் ஜப்பானின் நட்சத்திர வீராங்கனை அகேன் எமகுச்சி. தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். முதல் கேமில் 15-14 என்ற நிலையில், தொடா்ச்சியாக புள்ளிகளைக் குவித்து சிந்து 21-15 என கைப்பற்றினாா்.

இரண்டாவது கேமிலும் இருவரும் சரிக்கு சமமாக ஆடிய நிலையில், தொடா்ச்சியாக சிந்து 8 புள்ளிகளைப் பெற்றாா். 10-10 என சமநிலை ஏற்பட்ட நிலையில், எமகுச்சி சுதாரித்துக் கொண்டு சிந்துவின் முன்னிலையை குறைத்து 15-21 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் 5-5 என சமநிலை ஏற்பட்ட போதும், சிந்து தனது அதிரடியால் 17-12 என முன்னிலை பெற்றாா். ஆனால் எமகுச்சி மீண்டும் அபாரமாக ஆடி 19-19 என புள்ளிகளை சமநிலைக்கு தள்ளினாா். ஆனால் சிந்து தொடா்ச்சியாக 3 புள்ளிகளை ஈட்டி 21-19 என்ற கேம் கணக்கில் எமகுச்சியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

ஆன் சியோங் வெற்றி:

இரண்டாவது அரையிறுதியில் தென்கொரியாவின் ஆன் சியோங் 25-23, 21-17 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் சோச்சுவொங்கை வென்று இறுதிக்குள் நுழைந்தாா்.

கடந்த 2018-இல் உலக டூா் ஃபைனல்ஸ் போட்டியில் சிந்து பட்டம் வென்றாா். எனினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்று அவருக்கு எளிதாக இருக்காது. இந்தோனேசிய மாஸ்டா்ஸ் மற்றும் ஓபன் போட்டியில் சியோங் பட்டம் வென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT