செய்திகள்

வெல்கம் டூ தி கிளப்: அஜாஸ் படேலுக்கு கும்ப்ளே பாராட்டு!

4th Dec 2021 01:48 PM

ADVERTISEMENT

 

மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு மற்றொரு சாதனையாளர் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 150, அக்‌ஷர் படேல் 52 ரன்கள் எடுத்துள்ளார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

அஜாஸ் படேலின் சாதனைக்கு அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

வெல்கம் டூ தி கிளப் அஜாஸ் படேல். அருமையாகப் பந்துவீசினீர்கள். டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இரு நாள்களில் இச்சாதனையை நிகழ்த்தியது சிறப்பானது என்று கூறியுள்ளார்.

டெஸ்ட்: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்

ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956
அனில் கும்ப்ளே - 10-74, vs பாகிஸ்தான், 1999
அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021

Tags : Ajaz Patel Anil Kumble
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT