மும்பை டெஸ்டில் இருந்து மூன்று இந்திய வீரர்கள் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்குகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் நிகழ்வு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.
ADVERTISEMENT