இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கியது.
இந்தியாவில் விராட் கோலி தலைமையேற்கும் 31-வது டெஸ்ட் இது. இதன்மூலம் புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் 30 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய தோனியின் சாதனையைத் தற்போது தாண்டிச் சென்றுள்ளார். இந்தியாவில் இதுவரை தலைமையேற்ற 30 டெஸ்டுகளில் 23-ல் கோலிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ADVERTISEMENT
இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர்கள்
31* - விராட் கோலி
30 - தோனி
29 - கவாஸ்கர்
27 - மன்சூர் அலி கான் பட்டோடி
21 - செளரவ் கங்குலி