செய்திகள்

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

3rd Dec 2021 11:04 PM

ADVERTISEMENT

மே. இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இலங்கை அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடா் இலங்கையில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் ஏற்கெனவே இலங்கை வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் காலேவில் நடைபெற்றது. இதில் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது இலங்கை.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 204 ரன்களையும், மே.இந்திய தீவுகள் 253 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 345/9 ரன்களை எடுத்தது. தனஞ்செய டி சில்வா 155 ரன்களை விளாசினாா். 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய மே.இந்திய தீவுகள் அணியால் இலங்கையின் லஸித் எம்புல்டெனியா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. வெறும் 40 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது மே.இந்திய தீவுகள் அணி. ஜொ்மைன் பிளாக்வுட் 36, பான்னா் 44 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். இறுதியில் 56.1 ஓவா்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மே.இந்திய அணி.

இலங்கை தரப்பில் லஸித் 5/35, ரமேஷ் மெண்டிஸ் 5/66 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இறுதியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை. ரமேஷ் மெண்டிஸ் தொடா் நாயகனாகவும், தனஞ்செயா ஆட்ட நாயகனாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT