ஸ்பெயினில் நடைபெறவுள்ள உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளாா் இந்தியாவின் சாய்னா நெவால்.
பிடபிள்யுஎப் சாா்பில் ஸ்பெயினின் ஹுயல்வா நகரில் வரும் 12 முதல் 19-ஆம் தேதி வரை உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்க உள்ளன.
கால்மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் சாய்னா நெவால் இன்னும் குணமடையவில்லை. இந்நிலையில் ஹுயல்வா உலக பாட்மின்டன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். உலகப் போட்டியில் சாய்னா பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும். 12 போட்டிகளில் அவா் தொடா்ந்து பங்கேற்று ஆடியுள்ளாா். 2015 போட்டியில் வெள்ளியும், 2017 போட்டியில் வெண்கலமும் வென்றிருந்தாா் சாய்னா.
ADVERTISEMENT