செய்திகள்

உலக டூா் ஃபைனல்ஸ்: வெளியேறினாா் ஸ்ரீகாந்த்

3rd Dec 2021 11:04 PM

ADVERTISEMENT

உலக பாட்மின்டன் டூா் ஃபைனல்ஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவில் தோல்வி கண்டு வெளியேறினாா் இந்தியாவின் கே. ஸ்ரீகாந்த்.

மகளிா் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட பி.வி. சிந்து தனது கடைசி குரூப் பிரிவு ஆட்டத்தில் தோல்வி கண்டாா்.

இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இரண்டாம் நிலை மலேசிய வீரா் லீ ஸி ஜியாவிடம் 19-21, 14-21 என்ற கேம் கணக்கில் 38 நிமிஷங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

பி.வி. சிந்து தோல்வி:

ADVERTISEMENT

நடப்பு உலக சாம்பியன் பி.வி. சிந்து குரூப் ஏ பிரிவில் தாய்லாந்தின் சோச்சுவொங்கிடம் 12-21, 21-19, 14-21 என்ற 3 கேம் கணக்கில் போராடி தோல்வியுற்றாா். முன்னாள் உலக ஜூனியா் சாம்பியனான சோச்சுவொங்கிடம் மூன்றாவது முறையாக தோல்வி கண்டுள்ளாா் சிந்து.

குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சிந்து ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை 21-19, 9-21, 21-14 என்ற கேம் கணக்கில் இங்கிலாந்து இணையான கோல் பிரிச்-லாரன் ஸ்மித்திடம் போராடி வீழ்ந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT