செய்திகள்

ஆசிய அணிகள் ஸ்குவாஷ்: இந்திய ஆடவர், மகளிர் அரையிறுதிக்கு தகுதி

3rd Dec 2021 09:54 AM

ADVERTISEMENT


கோலாலம்பூர்: ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றன. 

இதில் ஆடவர் அணி தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை 3}0 என முழுமையாக வீழ்த்தியது. ரமித் டாண்டன் 11-4, 11-4, 11-3 என சத்ரியா பாகஸ் லக்சனாவை 18 நிமிஷங்களில் வீழ்த்தினார். மகேஷ் மங்கான்கர் 11-6, 11-4, 11-4 என ஆகுங் விலான்ட்டை 18 நிமிஷங்களிலும், வேலவன் செந்தில்குமார் 11-4, 11-2, 11-5 என அடே ஃபர்கோனை 17 நிமிஷங்களிலும் வென்றனர். இதையடுத்து குரூப் சுற்றின் 5 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு தகுதிபெற்றது இந்திய ஆடவர் அணி. 

மகளிர் அணி தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 3-0 என ஈரானை தோற்கடித்தது. அதில் ஜோஷ்னா சின்னப்பா 11-7, 11-2, 11-3 என காஸல் ஷராஃப்போரை 12 நிமிஷத்திலும், சுனைனா குருவிலா 11-3, 11-8, 11-6 என ஃபெரெஷ்டே எக்டேடாரியை 14 நிமிஷத்திலும் வீழ்த்தினர். ஊர்வஷி ஜோஷி 11-1, 11-5, 11-5 என அய்லீ நயேரியை 13 நிமிஷத்திலும் வென்றார். மகளிர் அணி தனது குரூப் சுற்றில் மலேசியாவிடம் மட்டும் தோல்வி கண்டது. 
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களது அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT