செய்திகள்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிக்கலுக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் அளிக்கும் தீர்வு

2nd Dec 2021 01:21 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு சதமும் அரை சதமும் அடித்ததால் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார் ஷ்ரேயஸ் ஐயர். 

2-வது டெஸ்ட் மும்பையில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குவதால் யாரை அணியிலிருந்து நீக்குவது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புஜாராவும் ரஹானேவும் சமீபகாலமாக சுமாராக விளையாடி வருவதால் அவர்களில் ஒருவரை நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

இந்திய அணி சிரமமான சூழலில் இருந்தபோது ரன்கள் எடுத்து அணிக்குப் பங்களித்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை 2-வது டெஸ்டில் தீர்மானிப்பது சிரமமானது. மயங்க் அகர்வால் இரு இன்னிங்ஸிலும் சுமாராக விளையாடினார். கிரீஸிலும் அவர் அசெளகரியமாக உணர்ந்ததைக் காண முடிந்தது. புஜாராவால் தொடக்க வீரராக விளையாட முடியும். இதற்கு முன்பு தொடக்க வீரராக விளையாடியுள்ளார். 3-ம் நிலை வீரராக ரஹானே களமிறங்கலாம். விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் அடுத்து களமிறங்கலாம். இம்முடிவை எடுப்பது கோலிக்கும் டிராவிடுக்கும் கடினமாக இருக்கலாம். அவர்கள் சரியான முடிவை எடுத்து ஷ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : Dravid Kohli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT