செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது ஆட்டம் டிரா

2nd Dec 2021 11:27 AM

ADVERTISEMENT

 

துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5-வது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் - ரஷியாவைச் சேர்ந்த இயன் நிபோம்நிஷி ஆகியோருக்கிடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் வீரர் உலக சாம்பியனாக பட்டம் சூட்டப்படுவார். கேண்டிடேட்ஸ் போட்டியை வென்றதன் மூலம் இப்போட்டியில் விளையாட இயன் நிபோம்நிஷி தகுதி பெற்றார். 

முதல் 4 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் 5-ம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. நிபோம்நிஷி வெள்ளை நிற காய்களுடனும் கார்ல்சன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி 5-வது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. நேற்றைய ஆட்டம் 43 நகர்த்தல் வரை சென்றது. 

ADVERTISEMENT

இன்று வீரர்களுக்கு ஓய்வு நாள். 6-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் இரு ஆட்டங்களில் வெள்ளை நிற காய்களைக் கொண்டு விளையாடவுள்ளார் கார்ல்சன். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் அடுத்த ஆட்டங்களில் கார்ல்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன், நிபோம்நிஷி ஆகிய இருவரும் தலா 2.5 புள்ளிகளை எடுத்துள்ளார்கள்.  

Tags : Carlsen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT