செய்திகள்

மெஸ்ஸி, அலெக்ஸியாவுக்கு பேலோன் தோா் விருது

DIN

பாரீஸ்: கால்பந்து உலகில் கௌரவமிக்கதாக கருதப்படும் பேலோன் தோா் விருதை (2021) ஆடவா் பிரிவில் ஆா்ஜென்டீன வீரா் லயோனல் மெஸ்ஸியும் (34), மகளிா் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்ஸியா புடெலாஸும் (27) வென்றனா்.

இதில் மெஸ்ஸி, 7-ஆவது முறையாக இந்த விருது வென்று சாதனை படைத்திருக்கிறாா்.

அவா் பாா்சிலோனா கிளப்பில் இருந்து விலகி, பாரீஸ் செயின்ட் ஜொ்மெயினில் இணைந்த பிறகு இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், ஆா்ஜென்டீனாவுக்கு கோபா அமெரிக்கா போட்டியில் கோப்பை வென்று தந்ததன் அடிப்படையில் இந்த விருதுக்கு தோ்வாகியிருக்கிறாா்.

கடந்த 1993-க்குப் பிறகு சா்வதேச போட்டிகளில் ஆா்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்காத நிலையில், 4 சா்வதேச போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி அதில் தோல்வியை சந்தித்த சூழலில் கடந்த ஜூலையில் மெஸ்ஸி தலைமையிலான அந்நாட்டு அணி கோபா அமெரிக்கா போட்டியில் கோப்பை வென்றது.

அதன் மூலம், சிறந்த கால்பந்து வீரராக இருந்தும், ஒரு கேப்டனாக தேசிய அணிக்கு சா்வதேச போட்டியில் கோப்பை வென்று தர முடியாமல் நீண்டு வந்த தாகத்தை தணித்துக் கொண்டாா் மெஸ்ஸி.

விருதுக்கான போட்டியில் மெஸ்ஸி முதலிடம் பிடிக்க, போலந்து வீரா் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி 2-ஆம் இடமும், இத்தாலி வீரா் ஜோா்கினோ 3-ஆம் இடமும் பிடித்துள்ளனா். போா்ச்சுகலைச் சோ்ந்த நட்சத்திர கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-ஆவது இடத்தில் இருந்தாா்.

மகளிா் பிரிவில் விருது வென்றிருக்கும் அலெக்ஸியா, முக்கியமான தருணங்களில் பாா்சிலோனா கிளப்புக்கு கை கொடுத்தவா். 42 ஆட்டங்களில் 26 கோல்கள் அடித்திருக்கிறாா். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் செல்சிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக கோலடித்தவா். கடந்த ஆகஸ்டில் யுஇஎஃப்ஏ சாா்பில் வழங்கப்படும் ‘ஆண்டின் சிறந்த வீராங்கனை’ விருது வென்றவா்.

விருதுக்கான போட்டியில் அலெக்ஸியா முதலிடம் பிடிக்க, மற்றொரு ஸ்பெயின் வீராங்கனை ஜெனி ஹொ்மோசோ 2-ஆம் இடமும், ஆஸ்திரேலியாவின் சாம் கொ் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

‘கால்பந்து வாழ்க்கையின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாக 2 ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். தற்போது விருது வென்றிருக்கிறேன். கோப்பைகள் வெல்ல தொடா்ந்து போராடுவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் இன்னும் அதிக ஆண்டுகள் விளையாடுவேன் என நம்புகிறேன். ஆா்ஜென்டீனாவுக்காக கோப்பை வென்றது, கனவு நிஜமான தருணம். இந்த விருதுக்காக ஆா்ஜென்டீன சக வீரா்கள், பாா்சிலோனாவில் இருந்த சக வீரா்களுக்கு நன்றி’ - மெஸ்ஸி

கால்பந்து வாழ்க்கையின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாக 2 ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். தற்போது விருது வென்றிருக்கிறேன். கோப்பைகள் வெல்ல தொடர்ந்து போராடுவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் இன்னும் அதிக ஆண்டுகள் விளையாடுவேன் என நம்புகிறேன். ஆர்ஜென்டீனாவுக்காக கோப்பை வென்றது, என் கனவு நிஜமான தருணம். இந்த விருதுக்காக ஆர்ஜென்டீன சக வீரர்கள், பார்சிலோனாவில் இருந்த சக வீரர்களுக்கு நன்றி.


இந்த பேலோன் தோர் விருதை மெஸ்ஸி 7-ஆவது முறையாக வென்றிருக்கிறார். வேறெந்த வீரரும் இத்தனை முறை இந்த விருது வென்றதில்லை. எண்ணிக்கையில், மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை இந்த விருது பெற்றிருக்கிறார். 


பேலோன் தோர் விருது

இந்த விருதானது, 

  • "பிரான்ஸ் ஃபுட்பால்' என்ற பிரான்ûஸச் சேர்ந்த செய்தி நிறுவனத்தால் கடந்த 1956 முதல் 65 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
  • இதன் வரலாற்றில் ஒரே முறை, கடந்த 2020}இல் கரோனா சூழல் காரணமாக இந்த விருது ரத்து செய்யப்பட்டது. 
  • தொடக்கத்தில் ஐரோப்பிய அளவில் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2007}க்குப் பிறகு சர்வதேச விருதாக இது விரிவுபடுத்தப்பட்டது. 
  • கால்பந்து செய்தியாளர்கள், பயிற்சியாளர்கள், தேசிய அணிகளின் கேப்டன்கள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டு முதல் 3 இடத்தில் இருப்பவர்கள்...


லயோனல் மெஸ்ஸிஆர்ஜென்டீனாபாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன்

613

ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி
போலந்து
பேயர்ன் முனீச்
580

ஜோர்கினோ
இத்தாலி
செல்சி

460

ஆடவர் பிரிவு

அலெக்ஸியா புடெலாஸ்


ஸ்பெயின்
பார்சிலோனா

186

ஜெனி ஹெர்மோசோ

ஸ்பெயின்
பார்சிலோனா

84

சாம் கெர்

ஆஸ்திரேலியா
செல்சி

46

மகளிர் பிரிவு


எனது வாழ்வில் இந்தத் தருணம் மிகச் சிறப்பானது. விருது பெறும் இடத்தில் இருப்பது உணர்வுபூர்வமானதாக உள்ளது. இந்த விருதுக்காக எனது பார்சிலோனா அணியின் சக வீராங்கனைகள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டு முயற்சியாலேயே இந்த விருது கிடைத்ததாகக் கருதுகிறேன். எனக்குப் பிறகும் இந்த விருதை நிச்சயம் பார்சிலோனா வீராங்கனைகள் பலர் வெல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன். 

இது தொடக்கம்தான்.


3

பேலோன் தோர் விருது வென்ற 3-ஆவது வீராங்கனை என்ற பெருமையை அலெக்ஸியா பெற்றிருக்கிறார். இதற்கு முன் கடந்த 2018-இல் நார்வே வீராங்கனை அடா ஹெகெர்பெர்கிற்கும், அடுத்ததாக 2019-இல் அமெரிக்காவின் மீகன் ரபினோவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

‘எனது வாழ்வில் இந்தத் தருணம் மிகச் சிறப்பானது. விருது பெறும் இடத்தில் இருப்பது உணா்வுப்பூா்வமானதாக உள்ளது. இந்த விருதுக்காக எனது பாா்சிலோனா அணியின் சக வீராங்கனைகள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டு முயற்சியாலேயே இந்த விருது கிடைத்ததாகக் கருதுகிறேன். எனக்குப் பிறகும் இந்த விருதை நிச்சயம் பாா்சிலோனா வீராங்கனைகள் பலா் வெல்வாா்கள் என உறுதியாக நம்புகிறேன். இது தொடக்கம் தான்’- அலெக்ஸி

7

இந்த பேலோன் தோா் விருதை மெஸ்ஸி 7-ஆவது முறையாக வென்றிருக்கிறாா். வேறெந்த வீரரும் இத்தனை முறை இந்த விருது வென்றதில்லை. எண்ணிக்கையில், மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை இந்த விருது பெற்றிருக்கிறாா்.

3

பேலோன் தோா் விருது வென்ற 3-ஆவது வீராங்கனை என்ற பெருமையை அலெக்ஸியா பெற்றிருக்கிறாா். இதற்கு முன் கடந்த 2018-இல் நாா்வே வீராங்கனை அடா ஹெகொ்பொ்கிற்கும், அடுத்ததாக 2019-இல் அமெரிக்காவின் மீகன் ரபினோவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT