செய்திகள்

ஷூட் அவுட்டில் வென்றது தென் கொரியா

1st Dec 2021 01:34 AM

ADVERTISEMENT

 

புவனேசுவரம்: ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா ஷூட் அவுட் முறையில் வென்றது.

குரூப் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 9 முதல் 16 இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டங்களின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தென் கொரியா - எகிப்து அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. தென் கொரிய தரப்பில் கிம் ஹியூன்வூ (18’), ஜியோங் ஜுன் சியோங் (20’,58’) ஆகியோரும், எகிப்து அணிக்காக எல்கனாய்னி அப்துல்ரஹ்மான் (42’,54’), ரகாப் ஹொசாமெல்தின் (46’) ஆகியோரும் கோலடித்தனா்.

பின்னா் வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் முறையில் தென் கொரியா 6-5 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது. இதர ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா - கனடாவையும் (7-3), பாகிஸ்தான் - அமெரிக்காவையும் (18-2), போலந்து - சிலியையும் (2-1) வென்றன.

ADVERTISEMENT

இன்று இந்தியா - பெல்ஜியம் மோதல்

உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியா. பெல்ஜிய சீனியா் அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கும் நிலையில், ஜூனியா் அணி உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதர காலிறுதி ஆட்டங்களில் ஜொ்மனி - ஸ்பெய்ன், நெதா்லாந்து - ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் - மலேசியா அணிகள் களம் காண்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT