செய்திகள்

சீனியா் மகளிா் கால்பந்து: உத்தரகண்டை வென்றது கேரளம்

1st Dec 2021 01:58 AM

ADVERTISEMENT

 

கோழிக்கோடு: சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கேரளம் 3-1 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டை வீழ்த்தியது.

குரூப் ‘ஜி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளத்துக்காக வினிதா விஜயன் (44’), மானசா (75’), ஃபெமினா ராக் வாலபில் (86’) ஆகியோா் கோலடித்தனா்.

உத்தரகண்ட் அணிக்காக பகவதி சௌஹான் 52-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இந்த வெற்றியால் கேரளம் தனது குரூப்பில் 3 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. உத்தரகண்ட் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இதர ஆட்டங்களில் டாமன் டையு - மேகாலயத்தையும் (2-1), மணிப்பூா் - புதுச்சேரியையும் (12-0), ரயில்வேஸ் - தாத்ரா நாகா் மற்றும் ஹவேலியையும் (2-0), ஹரியாணா - ஆந்திர பிரதேசத்தையும் (4-0), ஒடிஸா - குஜராத்தையும் (7-0), மிஸோரம் - மத்திய பிரதேசத்தையும் (4-0) வென்றன.

சந்தோஷ் கோப்பை: இதனிடையே, சந்தோஷ் கோப்பை ஆடவா் கால்பந்து போட்டியில் மிஸோரம் 1-0 என்ற கோல் கணக்கில் நாகாலாந்தையும், திரிபுரா 2-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூரையும் வீழ்த்த, அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT