செய்திகள்

கொல்கத்தாவில் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று

31st Aug 2021 01:07 PM

ADVERTISEMENT

 

ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கரோனா பரவல் காரணமாக ரஞ்சி போட்டி நடைபெறவில்லை. இந்த வருடம் ரஞ்சி போட்டி உள்பட உள்ளூர் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி, அக்டோபர் 27-ல் தொடங்கி, நவம்பர் 22-ல் முடிவடையவுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி, டிசம்பர் 1-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. ரஞ்சி கோப்பைப் போட்டி, ஜனவரி 5-ல் தொடங்கி மார்ச் 20-ல் முடிவடையவுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து போட்டிகளிலும் எந்த அணியாலும் தனது சொந்த மண்ணில் விளையாட முடியாது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று தில்லியிலும் ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ரஞ்சி போட்டி - மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஆமதாபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நாக் அவுட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 20 முதல் நாக் அவுட் ஆட்டங்கள் தொடங்குகின்றன. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி எங்கு நடைபெறும் என்கிற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

Tags : march kolkata
ADVERTISEMENT
ADVERTISEMENT