செய்திகள்

பாராலிம்பிக்ஸ்: அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்த இந்தியாவின் பவினா படேல்

27th Aug 2021 06:12 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸில் அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் பவினா படேல்.

இன்று நடைபெற்ற கிளாஸ் 4 பிரிவு மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் பிரேஸிலின் ஒலிவேரியாவை 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தார் பவினா படேல். அதன்பிறகு, காலிறுதிச் சுற்றில் உலகின் நெ. 2 வீராங்கனை செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 11-5, 11-6, 11-7 என 18 நிமிடங்களில் ஆட்டத்தை வென்றார். பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நுழைந்தாலே பதக்கம் உறுதி என்பதால் இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா படேல். 

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை பவினா படேல் பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT