செய்திகள்

ஆஸி. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற வீரர்: தேர்வு செய்த ஐபிஎல் அணி!

20th Aug 2021 05:51 PM

ADVERTISEMENT

 

ஆஸி. டி20 உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள நாதன் எல்லீஸுக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஒப்பந்தத்தில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20யில் அறிமுகமான எல்லீஸ், முதல் டி20 ஆட்டத்திலேயே ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். பிறகு ஆஸி. டி20 உலகக் கோப்பை அணியில் மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில் ஆஸி. உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்ததால் மூன்று ஐபிஎல் அணிகள் எல்லீஸை ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஒரு ஐபிஎல் அணியின் ஒப்பந்தத்தை அவர் பெற்றுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களும் உலகக் கோப்பைப் போட்டியும் நடைபெறவுள்ளன. பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஜை ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் ஆகிய ஆஸி. வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

 

Tags : t20 Ellis
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT