செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள்: சச்சினை முந்திய ஜோ ரூட்

14th Aug 2021 10:18 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சதமடித்து விளையாடி வரும் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம், குறைந்த வயதில் 9,000 ரன்களை எட்டியவர் வரிசையில் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார்.

இதையும் படிக்க | கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடி வீச்சு: கொந்தளித்த கோலி

ADVERTISEMENT

சச்சின் டெண்டுல்கர் 30 வயது 253 நாள்களில் 9,000 ரன்களை எட்டினார். ஜோ ரூட் இதே மைல்கல்லை 30 வயது 227 நாள்களில் எட்டியுள்ளார். அலெஸ்டர் குக் 30 வயது 159 நாள்களில் 9,000 ரன்களை எட்டினார்.

குறைந்த இன்னிங்ஸில் 9,000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் குமார் சங்கக்காரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 172 ரன்களில் இதனை எட்டியுள்ளார். ஆனால், 195-வது இன்னிங்ஸில் எட்டியதன்மூலம் அலெஸ்டர் குக்கை (204) முந்தியுள்ளார் ஜோ ரூட்.

Tags : root
ADVERTISEMENT
ADVERTISEMENT