செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்டில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறது?: 2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ

14th Aug 2021 11:49 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி, 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்க்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோ்த்தாா்.

2-வது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் ஆண்டா்சன் அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தாா். 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரூட் 48, பேர்ஸ்டோவ் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ADVERTISEMENT

3-ம் நாளில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் ஸ்கோரைத் தாண்டுமா அல்லது இந்திய அணி முன்னிலை பெறுமா என  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT