செய்திகள்

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் மொயீன் அலி, சாம் கரண் பங்கேற்பு!

14th Aug 2021 04:47 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று இரு கிரிக்கெட் வாரியங்களும் பிசிசிஐக்குத் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் ஐபிஎல் அணிகள் மகிழ்ச்சியாக உள்ளன. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விருப்பப்படும் ஆஸி. மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய முடிவை அணிகளிடம் தெரிவித்து வருகிறார்கள். கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் காரணமாக சில வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள். இதையடுத்து சாம் கரண், மொயீன் அலி, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் ஆகியோரை சிஎஸ்கே அணியில் மீண்டும் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொல்கத்தா அணியில் விளையாடும் இயன் மார்கன், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார். எனினும் செப்டம்பர் மாதம் 2-வது குழந்தை பிறக்கவுள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பட்லர் கூறியுள்ளார். 

Tags : IPL England
ADVERTISEMENT
ADVERTISEMENT