செய்திகள்

இந்தியா தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு?

12th Aug 2021 12:32 PM

ADVERTISEMENT

 

கடந்த மாதம், இலங்கைக்குச் சென்று ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனவும் டி20 தொடரை இலங்கை 2-1 எனவும் வென்றன. 

இந்திய ஆல்ரவுண்டர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக எட்டு வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் கடைசி இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணியில் புதிய வீரா்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களில் சஹால், கே. கெளதம் ஆகிய இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கிருனால் பாண்டியா, சஹால், கெளதம் ஆகிய மூன்று வீரர்களும் இலங்கையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். கரோனாவிலிருந்து குணமான பிறகுதான் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். தனிமைப்படுத்தப்பட்ட பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பதால் இலங்கையிலிருந்து நேராக இங்கிலாந்துக்குச் சென்று இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்கள். 

இந்நிலையில் இந்தத் தொடரால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 108 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மோகன் டி சில்வா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எஃப்.டி.பி.யின்படி இந்திய அணி 3 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடவேண்டும். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் முயற்சியால் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாட பிசிசிஐ சம்மதித்தது. இதனால் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் பிசிசிஐக்கும் இடையே உள்ள நல்லுறவால் இது சாத்தியமானது. இந்தத் தொடரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இதர உரிமைகள் மூலமாக 14.5 மில்லியன் டாலர் (ரூ. 108 கோடி) வருமானம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT