செய்திகள்

தோனியுடன் நடிகர் விஜய் சந்திப்பு (படங்கள்)

12th Aug 2021 02:25 PM

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து நடிகர் விஜய் புதன்கிழமை பேசியுள்ளார்.

சென்னையில் பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு இடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை சந்தித்து பேசினார்.

இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ADVERTISEMENT

கரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள போட்டிகள் அடுத்த மாதம் அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிற வீரர்களுடன் இன்னும் இரண்டு நாள்களில் துபை செல்வதற்காக கேப்டன் தோனி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT