செய்திகள்

இந்தியா டெஸ்ட் தொடரிலிருந்து ஸ்டுவர்ட் பிராட் விலகல்

11th Aug 2021 09:36 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் மழை காரணமாக டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த நிலையில் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து பிராட் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பயிற்சியின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதில் மாற்று வீரராக சகிப் மஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Stuart Broad
ADVERTISEMENT
ADVERTISEMENT