செய்திகள்

2-வது டெஸ்டிலிருந்து ஷர்துல் தாக்குர் விலகல்: என்ன செய்யப்போகிறது இந்திய அணி?

11th Aug 2021 06:10 PM

ADVERTISEMENT

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்குர், 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இத்தகவலை பிசிசிஐ தரப்பிலிருந்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஷர்துல் தாக்குர், 3-வது டெஸ்டுக்கு முன்பு முழு உடற்தகுதியடைந்து விளையாடத் தயாராக இருப்பார் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

நான்கு வேகப்பந்து வீச்சாளர் + ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்கிற கூட்டணியே இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தகவல் தெரிவித்த நிலையில் 2-வது டெஸ்டிலிருந்து ஷர்துல் தாக்குர் விலகியுள்ளதால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஸ்வின், லார்ட்ஸ் டெஸ்டில் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT