செய்திகள்

நாட்டிங்காமிலிருந்து நல்ல செய்தி: கடைசி நாள் ஆட்டம் நடைபெறுமா?

8th Aug 2021 06:57 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காமில் மழை நின்றுவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்கள் மட்டுமே தேவை என்ற வலுவான நிலையில் இந்தியா இருந்தது.

இதையும் படிக்கஇங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: இந்திய வெற்றிக்கு வில்லனாகிறதா மழை?

ஆனால், காலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முன்கூட்டியே உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட இந்தியாவின் வெற்றி வாய்ப்பு விகிதம் குறைந்தகொண்டே போகத் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் மழை நின்றுவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் ட்விட்டர் பதிவு:

"மழை நின்றுவிட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7 மணி) ஆய்வு மேற்கொள்ளப்படும்."

இதனால், 2.30 மணிக்கு நடுவர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் முடிவில் ஆட்டம் தொடங்குவது குறித்து தெரியவரும்.

Tags : ENGvIND
ADVERTISEMENT
ADVERTISEMENT