செய்திகள்

மழையால் ஆட்டம் ரத்து: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்; இந்தியாவின் வெற்றி பறிபோனது!

8th Aug 2021 08:37 PM

ADVERTISEMENT


இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து, ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவின் வெற்றிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தைத் தந்த ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சேத்தேஷ்வர் புஜாரா 3 பவுண்டரிகள் அடித்து துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஜூலை மாத சிறந்த வீரர்கள் பெயரைப் பரிந்துரைத்தது ஐசிசி

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் தலா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளை எடுக்கப்பட்டு, தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டும் மழை ஓய்ந்தபாடில்லை. இதனால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன்மூலம், முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்களே தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், மழையின் குறிக்கீடு இந்தியாவின் வெற்றியை தகர்த்துள்ளது.

Tags : ENGvIND
ADVERTISEMENT
ADVERTISEMENT