செய்திகள்

நாட்டிங்ஹாம் டெஸ்ட்: இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா

DIN


நாட்டிங்ஹாம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட், முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் சேர்த்தார். 
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. 
தொடக்க வீரர் ரோரி பர்ன்ûஸ முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றினார் பும்ரா. அடுத்து வந்த கிராவ்லி, சிப்லியுடன் சற்று நிலைத்தார். இந்த கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. 
இதில் கிராவ்லி 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தார். 
அடுத்து கேப்டன் ஜோ ரூட் ஆட வர, மறுபுறம் சிப்லி 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ, ரூட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 
4-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பை நீடிக்கவிடாமல் பிரித்தார் முகமது ஷமி. 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்திருந்த பேர்ஸ்டோ, ஷமி வீசிய 51-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 
அடுத்து வந்த டேனியல் லாரன்ஸ் டக் அவுட்டாக, தொடர்ந்து வந்த ஜோஸ் பட்லரும் ரன்னின்றி பெவிலியன் திரும்பினார். 
அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரூட்டும் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஷர்துல் தாக்குர் வீசிய 59-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். எஞ்சியோரில் ஆலி ராபின்சன் டக் அவுட்டாக, ஸ்டூவர்ட் பிராட் 4, ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 ரன்னுக்கு வீழ்ந்தனர். இறுதியாக சாம் கரன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 
இந்திய பெüலிங்கில் பும்ரா 4, ஷமி 3, ஷர்துல் தாக்குர் 2, சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனர். 
இந்தியா - 21
பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 9, கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


இந்தியா


விராட் கோலி (கேப்டன்), 
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், 
சேதேஷ்வர் புஜாரா, 
அஜிங்க்ய ரஹானே, 
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),
 ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, 
முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, 
முகமது ஷமி. 


இங்கிலாந்து


ஜோ ரூட் (கேப்டன்), 
ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், 
ஜோஸ் பட்லர், சாம் கரன், 
ஆலி ராபின்சன், 
ஸ்டுவர்ட் பிராட், 
ஜேம்ஸ் ஆன்டர்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT