செய்திகள்

இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்: உணவு இடைவேளையில் 97/1

DIN


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று (வியாழக்கிழமை) தொடங்கினர். சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 50 ரன்களைத் தாண்டினர். இங்கிலாந்தின் ஸ்கோர் குறைவு என்பதால் இது சிறப்பான தொடக்கமாகவே இருந்தது.

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் ரோஹித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டுடன் உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.

உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் ரோஹித் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT