செய்திகள்

ஸ்டோக்ஸைத் தொடர்ந்து ஆர்ச்சர்: இங்கிலாந்துக்குப் பேரிழப்பு

DIN


இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர் ஏற்கெனவே காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் ஸ்கேன் எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் முடிவில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன்மூலம், நிகழாண்டில் வரவுள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர்களில் அவரால் விளையாட முடியாது.

ஏற்கெனவே இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ், மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் முக்கியமான தொடர்களில் ஆர்ச்சரும் இல்லாமல்போவது இங்கிலாந்துக்குப் பெரிய இழப்பாக அமையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT