செய்திகள்

உணவு இடைவேளையில் இங்கிலாந்து 61 ரன்கள்: 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அபாரம்!

4th Aug 2021 05:49 PM

ADVERTISEMENT


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லே களமிறங்கினர். ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய முதல் ஓவரிலேயே பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சிப்லேவுடன் ஸாக் கிராலே இணைந்தார். இந்த இணை சற்று பாட்னர்ஷிப் அமைத்து விளையாடியது.

இதையும் படிக்கஅஸ்வின் சேர்க்கப்படவில்லையா..? ட்விட்டரில் குவியும் எதிர்ப்புகள்

ADVERTISEMENT

இந்த நிலையில் சிறப்பான பந்தை வீசிய முகமது சிராஜ், கிராலே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 42 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரூட் வந்த வேகத்தில் சிராஜ் பந்தில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

முதல்நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியத் தரப்பில் பூம்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags : Siraj
ADVERTISEMENT
ADVERTISEMENT