முனீச்: பவாரியன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.
போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் ஜான் தனது 4-ஆவது சுற்றில் சக நாட்டவரான டொமினிக் கோப்ஃபரை 7-6 (7/3), 6-7 (0/7), 6-2 என்ற செட்களில் வென்றார்.
காலிறுதியில் ஜான், போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருக்கும் செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை சந்திக்கிறார்.
முன்னதாக 4-ஆவது சுற்றில் கிரஜி னோவிச்சை எதிர்கொள்ள இருந்த ஜெர்மனியின் யானிக் ஹான்ஃப்மன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கிரஜினோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
இதர 4-ஆவது சுற்றுகளில் ஸ்லோவேகியாவின் நோர்பர்ட் கோம்போஸ் 6-4, 6-1
என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிகோ கோரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெலாரஸின் இலியா இவாஷ்கா 6-7 (7/9), 6-1, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டை தோற்கடித்தார்.
காலிறுதியில் இவாஷ்கா, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்ள இருக்கிறார்.