செய்திகள்

ரிஷப் பந்த, ஹெட்மயர் அதிரடி வீண்: பெங்களூர் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

27th Apr 2021 11:29 PM

ADVERTISEMENT

டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 22-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. ஆர்சிபி அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் சிறப்பாக ஆடினார். 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 12, படிக்கல் 17, ராஜத் படிதர் 31, மேக்ஸ்வெல் 25 ரன்கள் எடுத்தனர். பின்னர் 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 58(48), ஹெட்மயர் 53(25) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. 

ADVERTISEMENT

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT