செய்திகள்

இந்திய மகளிர் ஹாக்கி கேப்டனுக்கு கரோனா பாதிப்பு

27th Apr 2021 01:01 PM

ADVERTISEMENT

 

இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஏழு ஹாக்கி வீராங்கனைகள் கரோனாவால் பாதிப்படைந்துள்ளார்கள்.

பெங்களூர் உள்ள சாய் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக அவரவர் சொந்த ஊரிலிருந்து இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெங்களூருக்கு வந்திருந்தார்கள். சாய் அமைப்பின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஏப்ரல் 24 அன்று அனைத்து வீராங்கனைகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஏழு வீராங்கனைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுபற்றி சாய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணி ராம்பால், சவிதா புனியா, ஷர்மிலா தேவி, ரஜனி, நவ்ஜோத் கெளர், நவ்னீத் கெளர், சுஷிலா ஆகிய ஏழு வீராங்கனைகளுக்கும் விடியோ அனலிஸ்ட் மற்றும் ஆலோசகருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவருக்கும் அறிகுறிகள் இல்லை. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT