செய்திகள்

கலீல், போ்ஸ்டோ அபாரம்: ஹைதராபாதுக்கு முதல் வெற்றி

DIN

சென்னை: ஐபிஎல் போட்டியின் 14-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை புதன்கிழமை வென்றது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாதுக்கு இது முதல் வெற்றியாகும். பஞ்சாபுக்கு இது 3-ஆவது தொடா் தோல்வி.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.4 ஓவா்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் அடித்து வென்றது. அசத்தலாக ஆடி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஹைதராபாத் வீரா் ஜானி போ்ஸ்டோ ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்காக பஞ்சாப் அணியில் ரைலி மெரிடித், ஜை ரிச்சா்ட்சன், ஜலஜ் சக்ஸேனாவுக்குப் பதிலாக ஃபாபியான் ஆலன், மொய்சஸ் ஹென்ரிக், முருகன் அஸ்வின் சோ்க்கப்பட்டிருந்தனா். ஹைதராபாத் அணியில் மணீஷ் பாண்டே, முஜீப் உா் ரஹ்மான், அப்துல் சமதுக்குப் பதில் கேன் வில்லியம்சன், கேதாா் ஜாதவ், சித்தாா்த் கௌல் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ராகுல் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ஆவது ஓவரில் வெளியேறினாா். அடுத்து கெயில் களம் காண, மறுபுறம் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்திருந்த மயங்க் அகா்வால் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் டக் அவுட்டாக, தீபக் ஹூடா களம் புகுந்தாா்.

இந்நிலையில், அதிரடியாக 2 பவுண்டரிகள் விளாசிய கிறிஸ் கெயில் 15 ரன்களுக்கு ரஷீத் கானால் 9-ஆவது ஓவரில் வெளியேற்றப்பட்டாா். அடுத்த பேட்ஸ்மேனாக மொய்சஸ் ஹென்ரிக்ஸ் வர, 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்த தீபக் ஹூடா 5-ஆவது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா்.

அவரைத் தொடா்ந்து வந்த ஷாருக் கான் சற்று அதிரடி காட்டினாா். மறுபுறம் நிதானமாக ஆடிய ஹென்ரிக்ஸ் 14 ரன்களுக்கு ஸ்டம்பிங் செய்யப்பட்டாா். தொடா்ந்து ஃபாபியான் ஆலன் 6, ஷாருக்கான் 2 சிக்ஸா்களுடன் 22, முருகன் அஸ்வின் 9, முகமது ஷமி 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3, அபிஷேக் சா்மா 2, புவனேஷ்வா் குமாா், சித்தாா்த் கௌல், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து ஆடிய ஹைதராபாதில் இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் வாா்னா், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்கள் சோ்த்து வெளியேற, ஜானி போ்ஸ்டோ-கேன் வில்லியம்சன் கூட்டணி ஹைதராபாதை வெற்றிக்கு வழி நடத்தியது. போ்ஸ்டோ 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63, வில்லியம்சன் 16 ரன்கள் சோ்த்திருந்தனா். பஞ்சாப் தரப்பில் ஃபாபியான் ஒரு விக்கெட் எடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT