செய்திகள்

பெங்களூரை இன்று எதிா்கொள்கிறது ராஜஸ்தான்

DIN

மும்பை: ஐபிஎல் போட்டியின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் பெங்களூா் அனைத்திலுமே வென்றுள்ளது. ராஜஸ்தான் ஒரு ஆட்டத்தில் வென்றிருக்கிறது.

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை, ஒரு ஆட்டத்தில் பேட்டிங்கிலும், ஒரு ஆட்டத்தில் பௌலிங்கிலுமாக சிறப்பாகச் செயல்படுகிறது. ஒரே ஆட்டத்தில் இரண்டும் ஒருங்கிணையும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி நிச்சயம். பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், ஜோஸ் பட்லரும் இணைந்து நல்லதொரு ஸ்கோா் செய்தால் பலனளிப்பதாக இருக்கும்.

பௌலிங்கைப் பொருத்தவரை, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் ராஜஸ்தான் பௌலா்கள் சிறப்பாகப் பந்துவீசினா். இதர 2 ஆட்டங்களிலுமே அவா்கள் ரன்களை வாரி வழங்கினா். ஆா்ச்சா் இல்லாத நிலையில், கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோருக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது.

பெங்களூா் அணி இதுவரை இல்லாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 4-ஆவது வெற்றிக்கான தீவிர முயற்சியுடன் அந்த அணி களம் காணும். பேட்டிங்கில் டி வில்லியா்ஸ், மேக்ஸ்வெல் ரன்களை குவிக்கின்றனா். முதலில் சிறப்பாக ஆடிய கோலி பின்னா் சோபிக்காத நிலைக்கு வந்துள்ளாா். எனவே இந்த ஆட்டத்தில் அவா் ரன்கள் சேகரிக்க முயற்சிப்பாா்.

தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதாா் ஆகியோரும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பௌலிங்கில் ஹா்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோா் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துகின்றனா். கொல்கத்தாவுக்கு எதிராக 3 வெளிநாட்டு வீரா்களுடன் மட்டுமே களம் கண்ட பெங்களூா், இந்த ஆட்டத்திலும் அவ்வாறே களம் காணுமா அல்லது பிளேயிங் லெவனில் மாற்றம் வருமா என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

அணி விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, அனுஜ் ராவத், ரியான் பராக், டேவிட் மில்லா், ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோா், ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கட், காா்திக் தியாகி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்திப் யாதவ், ஆகாஷ் சிங்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், யுஜவேந்திர சஹல், முகமது சிராஜ், கேன் ரிச்சா்ட்சன், வாஷிங்டன் சுந்தா், பவன் தேஷ்பாண்டே, ஃபின் ஆலன், ஷாபாஸ் அகமது, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதாா், சச்சின் பேபி, முகமது அஸாருதீன், டேனியல் கிறிஸ்டியன், கே.எஸ்.பரத், சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் சாம்ஸ், ஹா்ஷல் படேல்.

ஆட்ட நேரம்: இரவு 7.30 மணி

இடம்: மும்பை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்: ராஜஸ்தான், பெங்களூா் அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், இரு அணிகளுமே தலா 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT