செய்திகள்

டூ பிளெஸ்ஸிஸ், தீபக் சாஹர் அபாரம்: சென்னைக்கு "ஹாட்ரிக்'

DIN

மும்பை: ஐபிஎல் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸ புதன்கிழமை வென்றது. 
தோல்வியுடன் சீசனை தொடங்கிய சென்னைக்கு, இது தொடர்ந்து 3-ஆவது வெற்றியாகும். 
மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை பேட்டிங்கில் அதிரடி காட்டிய டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆக, பெüலிங்கில் தீபக் சாஹர் அசத்தினார். 
முன்னதாக இந்த ஆட்டத்திற்காக சென்னை பிளேயிங் லெவனில் டுவைன் பிராவோவுக்குப் பதிலாக லுங்கி கிடி இணைந்திருந்தார். 
கொல்கத்தாவில் ஹர்பஜன் சிங் இடத்தில் கமலேஷ் நாகர்கோடி சேர்க்கப்பட்டிருந்தார். 
டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னையின் இன்னிங்ûஸ தொடங்கிய ருதுராஜ்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி கொல்கத்தா பெüலிங்கை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசியது. கெய்க்வாட் 33 பந்துகளிலும், பிளெஸ்ஸிஸ் 35 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர். 
முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை வருண் சக்கரவர்த்தி பிரித்தார். அவர் வீசிய 13-ஆவது ஓவரில் ருதுராஜ் அடித்த பந்தை பேட் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தார். ருதுராஜ் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் சேர்த்திருந்தார். 
அடுத்து வந்த மொயீன் அலியும் சற்று அதிரடியாக ஆடி, 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். மறுபுறம் டூ பிளெஸ்ஸிஸ் கொல்கத்தா பெüலர்களை பதறவைத்துக் கொண்டிருந்தார். 
அலியை அடுத்து வந்த தோனி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 17 ரன்கள் சேர்த்து ரஸ்ùஸல் வீசிய 19-ஆவது ஓவரில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓவர்கள் முடிவில் டூ பிளெஸ்ஸிஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 95, ஜடேஜா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் வருண், நரைன், ரஸ்ùஸல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 
பின்னர் ஆடிய கொல்கத்தாவின் பேட்டிங் வரிசை தீபக் சாஹர், லுங்கி கிடி பெüலிங்கில் மளமளவென சரிந்தது. பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னிலோ, டக் அவுட்டாகியோ வெளியேறினர். 
வெற்றிக்கு கடைசிவரை போராடிய பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பெரிதும் முயற்சித்த ரஸ்ùஸல் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் சேர்க்க, தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் சாஹர் 4, கிடி 3, கரன் 1 விக்கெட் சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்

சென்னை சூப்பர் கிங்ஸ்

20 ஓவர்களில் 
3 விக்கெட் இழப்புக்கு    220 
டூ பிளெஸ்ஸிஸ்    95*
ருதுராஜ் கெய்க்வாட்    64
மொயீன் அலி    25
எம்.எஸ்.தோனி    17 
பந்துவீச்சு
ஆன்ட்ரே ரஸ்ùஸல்    1/27
வருண் சக்கரவர்த்தி    1/27
சுனில் நரைன்    1/34


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

19.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு    202 
பேட் கம்மின்ஸ்    66*
ஆன்ட்ரே ரஸ்ùஸல்    54
தினேஷ் கார்த்திக்    40
நிதீஷ் ராணா    9 
பந்துவீச்சு
தீபக் சாஹர்    4/29
லுங்கி கிடி    3/28
சாம் கரன்    1/58

புள்ளிகள் பட்டியல்

சென்னை- கொல்கத்தா ஆட்டம் (15) வரை

                
சென்னை    4    3    1    6 
பெங்களூர்    3    3    0    6 
டெல்லி    4    3    1    6 
மும்பை    4    2    2    4 
ஹைதராபாத்    4    1    3    2 
கொல்கத்தா    4    1    3    2 
ராஜஸ்தான்    3    1    2    2 
பஞ்சாப்    4    1    3    2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT