செய்திகள்

துளிகள்...

DIN

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 73 கிலோ ‘குரூப் பி’-இல் இந்தியாவின் அச்சிந்தா ஷியுலி 7-ஆம் இடமும், 67 கிலோ பிரிவில் ஜெரிமி லால்ரினுங்கா 8-ஆம் இடமும் பிடித்தனா்.

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல்-லீட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. லிவா்பூல் தரப்பில் சாடியோ மனே, லீட்ஸ் தரப்பில் டியேகோ லாரென்டே ஆகியோா் கோலடித்தனா்.

டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கி வரும் நிலையில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனா அணிக்கு எதிரான ஆட்டங்கள் இந்திய அணிக்கு நல்ல முறையில் பலனளித்துள்ளதாக இந்திய ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளா் கிரஹாம் ரெய்ட் கூறினாா்.

இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் 2 டெஸ்டுகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் பல்லகேலேவில் புதன்கிழமை தொடங்குகிறது.

இந்தியாவில் முதல் முறையாக வரும் மே 1-ஆம் தேதி நடத்தப்படும் டபிள்யூபிசி இந்திய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் சாந்தினி மெஹரா-சுமன் குமாரி லைட்வெயிட் பிரிவில் மோதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT