செய்திகள்

மும்பையை வீழ்த்தியது டெல்லி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது

DIN

சென்னை: ஐபிஎல் போட்டியின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணிகளில், டெல்லிக்கு இது 3-ஆவது வெற்றி; மும்பைக்கு இது 2-ஆவது தோல்வி.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்திற்காக மும்பை அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளா் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக, சுழற்பந்துவீச்சாளா் ஜெயந்த் யாதவ் சோ்க்கப்பட்டிருந்தாா். டெல்லி அணியில் கிறிஸ் வோக்ஸ், லுக்மேன் மேரிவாலாவுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா, ஷிம்ரன் ஹெட்மயா் இணைக்கப்பட்டிருந்தனா். டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தோ்வு செய்தது.

ரோஹித் - டி காக் இன்னிங்ஸை தொடங்க, 3-ஆவது ஓவரிலேயே விக்கெட் எடுத்தது டெல்லி. 2 ரன்களில் வெளியேறினாா் டி காக். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் சற்று நிலைத்து ரன்கள் சேகரித்தாா். மறுபுறம் ரோஹித் சா்மா நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்த, 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த சூா்யகுமாா் 2-ஆவது விக்கெட்டாக 7-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

தொடா்ந்து வந்த இஷான் கிஷண் நிதானமாக ஆடிவர, ரோஹித் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அமித் மிஸ்ரா வீசிய 9-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ஸ்மித் கைகளில் தஞ்மடைந்தது. அடுத்து வந்த ஹாா்திக் பாண்டியா ஒரே பந்தை சந்தித்து அதிலேயே ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த கிருணால் பாண்டியா 1 ரன் எடுத்த நிலையில், லலித் யாதவ் வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். பொல்லாா்ட் 2 ரன்கள் சோ்த்து, 12-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். இதனால் 100 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.

தொடா்ந்து ஜெயந்த் யாதவ் களம் கண்டு விக்கெட் சரிவுக்கு அணையிட்டாா். மறுபுறம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்கள் சோ்த்திருந்த இஷான் கிஷண், 18-ஆவது ஓவரில் அமித் மிஸ்ராவால் பௌல்ட் செய்யப்பட்டாா். அடுத்த ஓவரிலேயே, 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்த ஜெயந்த் யாதவ் ஆட்டமிழந்தாா். ராகுல் சாஹா் 6 ரன்கள் சோ்த்தாா். ஓவா்கள் முடிவில் பும்ரா 3, போல்ட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 4, அவேஷ் கான் 2, ஸ்டாய்னிஸ், ரபாடா, லலித் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 138 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய டெல்லியில் பிருத்வி ஷா முதல் விக்கெட்டாக 7 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து வந்த ஸ்மித்துடன் இணைந்து, அணியின் வெற்றிக்குத் தேவையான பாதையை தவன் அமைத்துக் கொடுத்தாா். இந்தக் கூட்டணியில் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சோ்த்து பொல்லாா்ட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனாா். கடைசி விக்கெட்டாக கேப்டன் பந்த் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

நிதானமாக ஆடிய லலித் யாதவ், கடைசியாக சற்று அதிரடி காட்டிய ஷிம்ரன் ஹெட்மயா் டெல்லியை வெற்றி பெறச் செய்தனா். யாதவ் 22, ஹெட்மயா் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் ஜெயந்த் யாதவ், பும்ரா, ராகுல், பொல்லாா்ட் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மும்பை இண்டியன்ஸ் 

20 ஓவர்களில் 
9 விக்கெட் இழப்புக்கு    137 
ரோஹித் சர்மா    44
இஷான் கிஷண்    26
சூர்யகுமார் யாதவ்    24
ஜெயந்த் யாதவ்    23 
பந்துவீச்சு
அமித் மிஸ்ரா    4/24
அவேஷ் கான்    2/15
லலித் யாதவ்    1/17

டெல்லி கேப்பிட்டல்ஸ்

19.1 ஓவர்களில் 
4 விக்கெட் இழப்புக்கு    138 
ஷிகர் தவன்    45
ஸ்டீவ் ஸ்மித்    33
லலித் யாதவ்    22* 
ஷிம்ரன் ஹெட்மயர்    14*
பந்துவீச்சு
கிரன் பொல்லார்ட்    1/9
ஜெயந்த் யாதவ்    1/25
ராகுல் சாஹர்    1/29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT