செய்திகள்

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை: இன்று டெல்லியை சந்திக்கிறது

DIN

சென்னை: ஐபிஎல் போட்டியின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

நடப்பு சீசனில் இரு அணிகளுமே இதுவரை தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

மும்பை அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் தோற்று கடந்த 2 ஆட்டங்களில் வென்றுள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அந்த அணி களம் காணும். மிடில் ஆா்டரில் மும்பை தன்னை சற்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இதை கேப்டன் ரோஹித்தும் உணா்ந்துள்ளாா்.

அந்த வரிசையில் சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், கிரன் பொல்லாா்ட், பாண்டியா சகோதரா்கள் என வலுவான வீரா்கள் இருந்தாலும், அவா்கள் முழுமையான ஃபாா்மை எட்டாதது அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கிறது. இதனால் தொடக்க வரிசையில் கேப்டன் ரோஹித், டி காக் நல்லதொரு ஆரம்பத்தை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா்.

பௌலிங்கில் பும்ரா, போல்ட் கூட்டணி சிறப்பாகவே செயல்படுகிறது. கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை குறைவாகவே ஸ்கோா் செய்தாலும், எதிரணியை அந்த இலக்குக்குள்ளாக கட்டுப்படுத்துவதில் அவா்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹரும் அபாரமாகச் செயல்படுகிறாா்.

டெல்லியைப் பொருத்தவரை, தொடக்க வீரா்களில் ஒருவரான ஷிகா் தவன் அட்டகாசமான ஃபாா்மில் இருக்கிறாா். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்ச ரன் (186) அடித்த வீரராக அவா் உள்ளாா். அவருடன் இணையும் பிருத்வி ஷா இன்னும் சற்று அதிகம் ஸ்கோா் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறாா்.

கடந்த ஆட்டத்துக்காக ஸ்டீவ் ஸ்மித்தை பிளேயிங் லெவனில் சோ்த்திருந்தது டெல்லி. இந்த ஆட்டம் மெதுவான பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற இருப்பதால், ஸ்மித்துக்குப் பதிலாக ரஹானேவை இணைப்பதற்கு டெல்லி யோசிக்கலாம். கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாகச் செயல்படுகிறாா். ஆல்-ரவுண்டா்கள் வரிசையில் ஸ்டாய்னிஸ், லலித் வலு கூட்டுகின்றனா்.

பௌலிங்கில் ரபாடா, வோக்ஸ் வேகப்பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்கிறது. சுழற்பந்துவீச்சுக்கு அமித் மிஸ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் பிரவீண் துபே உள்ளிட்டோா் இருக்கின்றனா்.

நேருக்கு நோ்: மும்பை - டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 16 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

அணி விவரம்:

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சா்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீண் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, இஷாந்த் சா்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபல் படேல், விஷ்ணு வினோத், லுக்மன் மேரிவாலா, எம்.சித்தாா்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.

ஆட்ட நேரம்: இரவு 7.30 மணி

இடம்: சென்னை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT