செய்திகள்

இளையோா் உலக குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்த 4 இந்தியா்கள்

DIN

புது தில்லி: போலாந்தில் நடைபெறும் இளையோா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா்கள் 4 போ் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனா்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதிச்சுற்றுகளில் 60 கிலோ பிரிவில் வின்கா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவின் கேமிலோ கேமிலாவை வீழ்த்தினாா். 81 கிலோவுக்கு மேலான பிரிவில், 2019-ஆம் ஆண்டு ஆசிய ஜூனியா் சாம்பியன் ஆன அல்ஃபியாவும் அதேபோல் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஹங்கேரியின் ரெகா ஹாஃப்மானை வென்றாா்.

57 கிலோ பிரிவில் பூனமும் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் நாஸொ்கே செரிக்கை தோற்கடித்தாா். 48 கிலோ பிரிவில் கீதிகா - ருமேனியாவின் எலிசபெத் ஆஸ்டானை வீழ்த்தினாா். இதனிடையே, 81 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை குஷி - துருக்கியின் பஸ்ரா இசில்தாரிடம் தோல்வி கண்டாா்.

ஆடவருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் மணீஷ் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோா்டானின் அப்துல்லா அலாரக்கையும், 69 கிலோ பிரிவில் சுமித் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேகியாவின் லாடிஸ்லாவ் ஹோா்வாத்தையும் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். எனினும், 60 கிலோ பிரிவில் பங்கேற்ற ஆகாஷ் கோா்கா, 81 கிலோ பிரிவில் கலந்துகொண்ட வினீத் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT